Breaking News

Broomfield இல் இ-ஸ்கூட்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம்...!!

Broomfield இல் இ-ஸ்கூட்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம்...!!

இன்று பிற்பகல் Christchurch புறநகர்ப் பகுதியான Broomfield இல் இ-ஸ்கூட்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பிற்பகல் 3.50 மணியளவில் Marsham சாலையில் ஒரு இ-ஸ்கூட்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தன.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

விபத்தை தொடர்ந்து வடக்கு நோக்கி செல்லும் பாதை மூடப்பட்டது. வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்