Breaking News

Porirua வில் கார் டயர்களை வெட்டிய நபர் கைது...!!

Porirua வில் கார் டயர்களை வெட்டிய நபர் கைது...!!

சனிக்கிழமையன்று Porirua CBD மற்றும் North City Plaza பகுதிகளில் கார் டயர்கள் வெட்டப்பட்டதாக பெறப்பட்ட 20 புகார்களை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி அன்று, மதியம் 1 மணியளவில், ஒரு நபர் கார் டயர்களை வெட்டுவதைக் கண்டதை அடுத்து, Lyttleton Avenue விற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து Porirua வை சேர்ந்த 61 வயதான நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் Porirua மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

செய்தி நிருபர் - புகழ்