Breaking News

Waiuku வில் வாகனம் மோதுண்டு குழந்தை உயிரிழப்பு...!!

Waiuku வில் வாகனம் மோதுண்டு குழந்தை உயிரிழப்பு...!!

ஆக்லாந்தின் கிராமப்புற நகரமான Waiuku வில் வாகனம் மோதிய விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.07 மணியளவில் Mellsop Avenue வில் உள்ள ஒரு டிரைவ்வேயில் விபத்து குறித்து தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவசர சேவைகள் சம்பவ இடத்தில் இருந்த போது வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டது.

தீவிர விபத்து பிரிவு பொலிஸார் விபத்து தொடபிள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்