Breaking News

விஜய் - ஷாருக்கான் - மகேஷ்பாபுவை வைத்து மல்டி ஸ்டாரர் படம்; சிறப்பு தோற்றத்தில் மம்மூட்டி - நெல்சன் மாஸ் பிளேன்..!!

விஜய் - ஷாருக்கான் - மகேஷ்பாபுவை வைத்து மல்டி ஸ்டாரர் படம்; சிறப்பு தோற்றத்தில் மம்மூட்டி - நெல்சன் மாஸ் பிளேன்..!!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு GOAT திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் செப்டம்பர் மாதம் திரையில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து விஜய் தன் கடைசி திரைப்படமான தளபதி 69 பட பணிகளை மே மாதம் துவங்க இருக்கின்றார். விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

எச்.வினோத் தான் விஜய்யின் கடைசி திரைப்படத்தை இயக்கவுள்ளார் என கூறப்படுகின்றது. இருப்பினும் பல இயக்குனர்கள் விஜய்யை வைத்து படமெடுக்க ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குனர் நெல்சனும் இணைந்துள்ளார். விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கினார் நெல்சன். ஆனால் இப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

இருந்தாலும் விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படத்தை நெல்சன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஒரு விருது வழங்கும் விழாவில் நெல்சன் பேசும்போது விஜய் வைத்து மீண்டும் படமெடுக்க வாய்ப்பு கிடைத்தால் அப்படம் எப்படி இருக்கும் என்பதை பற்றி பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது, விஜய்- ஷாருக்கான்- மகேஷ் பாபு மூவரையும் இணைத்து ஒரு படமெடுக்க ஆசை என கூறியிருக்கின்றார் நெல்சன். அதுமட்டுமல்லாமல் அப்படத்தில் மம்மூட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்றும் பேசினார் நெல்சன். இந்த காம்போவை கேட்கும்போதே மெர்சலா இருக்கே என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இது போல ஒரு காம்போ விஜய்யின் கடைசி திரைப்படத்தில் அமைந்தால் அதைவிட சிறப்பான விஷயம் இருக்காது என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.