Breaking News

வெலிங்டன் தாவரவியல் பூங்கா கட்டிடம் பலத்த காற்றினால் சேதம்...!!

வெலிங்டன் தாவரவியல் பூங்கா கட்டிடம் பலத்த காற்றினால் சேதம்...!!

வெலிங்டனின் தாவரவியல் பூங்காவில் உள்ள ஒரு முக்கிய கட்டிடம் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் குறித்த கட்டிடம் அடுத்த வாரத்தின் நடுப்பகுதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1960 இல் கட்டப்பட்ட பெகோனியா ஹவுஸ், பல கவர்ச்சியான தாவரங்களைக் கொண்டுள்ளது மற்றும் இது திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் இடமாகும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பலத்த காற்று காரணமாக அதன் கூரையில் இருந்து இரண்டு கண்ணாடி துண்டுகள் சேதமடைந்தது, இதனால் கட்டிடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் தாவரவியல் பூங்காவின் மலர் காட்சி பகுதியும் பழுதுபார்ப்பு மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகளுக்காக மூடப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்