Breaking News

Hawkes Bay இல் விவசாய நிலத்தில் பாரிய தீ பரவல்...!!

Hawkes Bay இல் விவசாய நிலத்தில் பாரிய தீ பரவல்...!!

Hawkes Bay இல் உள்ள ஒரு விவசாய நிலத்தில் நேற்றையதினம் ஏற்பட்ட ஒரு பாரிய தீ  பரவலை அடுத்து 18 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தன.

இந்த தீ பரவல் இரவு 9.30 மணிக்குப் பின்னர் ஏற்பட்டது.

மேலும் தீயை அணைக்கும் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.

பணியாளர்கள் தீயை விரைந்து கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததாகவும், அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் தீயணைப்பு வாகனங்கள் வெளியேறத் தொடங்கியதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

வீடுகளுக்கோ, மக்களுக்கோ ஆபத்து ஏற்படவில்லை.

செய்தி நிருபர் - புகழ்