Breaking News

இலங்கையில் விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி...!!!

இலங்கையில் விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி...!!!

இலங்கை

இலங்கையில் நீரில் மூழ்கி உயிரிழப்புக்கள் அதிகம் பதிவாகும் இடங்களை சுகாதார அமைச்சகம் இனங்கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மக்கள் நீச்சலடிக்கச் சென்று நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறியும் செயலியை விரைவில் அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் வருடாந்தம் 800 முதல் 1000 பேர் வரை நீரில் மூழ்கி உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்னும் ஒரு மாதத்திற்குள் 500க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட உள்ளன.

எச்சரிக்கை பலகைகளை நிறுவுவதற்கு சேவை வழங்குநர்கள் விநியோகஸ்தர்களை தேர்ந்தெடுக்க இப்போது முன்மொழியப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, மக்கள் நீச்சலடிக்கச் சென்று நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறியும் செயலியை விரைவில் சுகாதார அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.