Breaking News

Whanganui பகுதியில் காணாமல்  போன இளம் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை கோரும் பொலிஸார்...!!

Whanganui பகுதியில் காணாமல்  போன இளம் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை கோரும் பொலிஸார்...!!

Whanganui பகுதியில் காணாமல்  போன ஒரு இளம் பெண்ணை கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸாரும், அவரது குடும்பத்தினரும் பொதுமக்களின் உதவியை கோருகின்றனர்.

Mercedes Capri Haddon என்ற 17 வயதான குறித்த பெண் கடைசியாக திங்களன்று Kowhai Park அருகே காணப்பட்டார்.

மெர்சிடிஸ் Palmerston North பகுதியைச் சேர்ந்தவர் என்றும், Whanganui இல் உள்ள உறவினர்களைப் பார்க்கச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

அவர் ஃபெடல் ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் கோளாறால் (FASDs), பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மெர்சிடிஸ் பற்றியோ அல்லது அவர் இருக்கும் இடத்தைப் பற்றியோ ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.