Breaking News

Hawke's Bay ஆற்றில் காணப்படும் நச்சுப் பாசிகள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை...!!

Hawke's Bay ஆற்றில் காணப்படும் நச்சுப் பாசிகள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை...!!

Hawke's Bay இல் உள்ள Tukituki ஆற்றில் நச்சுத்தன்மையுள்ள பாசிகள் காணப்படுவதால் நீச்சல் வீரர்கள் மற்றும் நாய் உரிமையாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கோடையில் கிழக்கு கடற்கரை முழுவதும் நச்சு பாசிகள் பரவலாக உள்ளன.

Central Hawke's Bay இல் உள்ள வாக்கர் சாலைக்கு அருகில் பல நச்சு பாசிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Hawke's Bay இல் வெப்பமான காலநிலை நிலவுவதால் ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வருகிறது, இது பாசி வளர்ச்சிக்கான சரியான சூழலை உருவாக்குகிறது என்று கவுன்சிலின் நீர் தரம் மற்றும் சூழலியல் கண்காணிப்பு குழு தலைவர் ஜோர்டான் எல்மர்ஸ் கூறினார்.

இதை தொட்டால் அல்லது உட்கொண்டால் மக்கள் மற்றும் நாய்களுக்கு சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

நச்சுத்தன்மை வாய்ந்த பாசிகள் குறிப்பாக நாய்களை கவர்ந்திழுக்கும் ஒரு கஸ்தூரி வாசனையை வெளியிடும். அவை ஒரு முறை முகர்ந்துவிட்டால், அவற்றை நக்குவதையோ அல்லது சாப்பிடுவதையோ தடுப்பது கடினமாக இருக்கும் என்று எல்மர்ஸ் கூறினார்.

கவுன்சிலின் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு Tukituki, Tūtaekurī மற்றும் Esk நதிகளை ஒட்டிய இடங்களில் வாரந்தோறும் சோதனை செய்து வருகிறது.

மக்கள் தங்கள் நீச்சல் இடத்தில் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நச்சுப் பாசிகள் பாறைகளில் இருந்து பிரிந்து, ஆற்றங்கரையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லலாம், எனவே நீங்கள் குளிப்பதற்கு முன் எப்போதும் தண்ணீரைச் சரிபார்க்கவும் என அவர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்