Breaking News

ஆக்லாந்தில் 12 வயது சிறுமி மாயம் - பொதுமக்கள உதவியை கோரும் பொலிஸார்...!!

ஆக்லாந்தில் 12 வயது சிறுமி மாயம் - பொதுமக்கள உதவியை கோரும் பொலிஸார்...!!

ஆக்லாந்தில் காணாமல் போன 12 வயது சிறுமியை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

ஜனவரி 12 அன்று Glendene இல் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய காசியஸ் என்ற குறித்த சிறுமி வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரது குடும்பத்தினரால் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இந்த சிறுமி Sunnyvale அல்லது New Lynn பகுதிகளில் இருக்கலாம் என தாங்கள் நம்புவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

அவரது வயது காரணமாக, அவரது குடும்பத்தினரும் காவல்துறையினரும் கவலையடைந்துள்ளனர் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

இந்த இந்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்