Breaking News

புதிய வகை நுண்ணிய உயிரினங்கள் நியூசிலாந்தின் பனிப்பாறைகளில் கண்டுபிடிப்பு...!!!

புதிய வகை நுண்ணிய உயிரினங்கள் நியூசிலாந்தின் பனிப்பாறைகளில் கண்டுபிடிப்பு...!!!

தெற்கு Alps இல் புதிய வகை நுண்ணிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நீர் கரடிகள் அல்லது பாசி பன்றிகள் என்றும் அழைக்கப்படும் டார்டிகிரேடு‌ நுண்ணுயிர் இனங்கள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டவை மற்றும் உலகம் முழுவதும் உள்ள கடுமையான சூழலில் இவை வாழ்கின்றன.

ஒடாகோ பல்கலைக்கழக பேராசிரியர் பீட்டர் டியர்டன் கூறுகையில்..ஹ

Fox and Franz Joseph பனிப்பாறைகள் மற்றும் Whataroa Valley இல் நான்கு தனித்துவமான டார்டிகிரேட் நுண்ணுயிர்
இனங்கள் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

"முக்கியமாக, அவை பனியில் உறைந்து சிக்கிக் கொள்ளவில்லை, அவை சுற்றி நகர்கின்றன, அவை பாசிகளை சாப்பிடுகின்றன," என்று அவர் கூறினார்.

"இவை எங்கள் பனிப்பாறைகளின் பனியில் வாழ்கின்றன, அது ஒரு குறிப்பிடத்தக்க விஷயம்."

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெவ்வேறு டார்டிகிரேட் இனங்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றன. ஆனால் அவை அனைத்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று டியர்டன் மதிப்பிட்டுள்ளார்.

இந்த இனங்களின் சிறப்பு என்னவென்றால், அவை திடமான பனியில் வாழ்கின்றன என்று டியர்டன் கூறினார்.

பனிப்பாறைகள் உடைந்ததால் இந்த புதிய இனங்கள் கிளைத்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.