Breaking News

வெலிங்டன் குழந்தைகள் மருத்துவமனையில் திடீரென ஒலித்த தீ எச்சரிக்கை ஒலி - பரபரப்பு...!!

வெலிங்டன் குழந்தைகள் மருத்துவமனையில் திடீரென ஒலித்த தீ எச்சரிக்கை ஒலி - பரபரப்பு...!!

வெலிங்டன் குழந்தைகள் மருத்துவமனையில் தீ எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை 8.45 மணியளவில் நகரம் முழுவதும் இருந்து 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.

30 நோயாளிகள் மருத்துவமனையின் பிற பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.

மருத்துவமனையில் வாயு கசிவு ஏற்பட்டதால் இந்த தீ எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது ‌

இந்நிலையில் Health New Zealand Te Whatu Ora Capital, Coast & Hutt Valley செய்தித் தொடர்பாளர் ஜேமி டங்கன் கூறுகையில், தீ அலாரங்கள் இயக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.

அனைத்து நோயாளிகளும் வெலிங்டன் பிராந்திய மருத்துவமனை முழுவதும் பொருத்தமான மருத்துவ இடங்களுக்கு மாற்றப்படும் பணியில் உள்ளனர், மேலும் முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு மற்றும் அவசர நியூசிலாந்து சம்பவ இடத்தில்  உள்ளது," என்று அவர் கூறினார்.

நோயாளிகள், பார்வையாளர்கள் அல்லது ஊழியர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என அவர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்