Breaking News

Canterbury இல் இடம்பெற்ற பயங்கர விபத்து தொடர்பில் ஒருவர் கைது...!!

Canterbury இல் இடம்பெற்ற பயங்கர விபத்து தொடர்பில் ஒருவர் கைது...!!

ஞாயிற்றுக்கிழமை Canterbury இல் உள்ள Castle Hill என்ற இடத்தில் இடம்பெற்ற ஒரு பயங்கரமான விபத்து தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

West Coast சாலையில் இரு வாகனங்கள் மோதிய இந்த விபத்து இடம்பெற்றது. மேலும் இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்தனர்.

மேலும் இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் 47 வயதுடைய நபரொருவர் கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவர் திங்கட்கிழமை Christchurch மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என அவர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்