Breaking News

திருட்டு குற்றம்சாட்டப்பட்ட நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்‌ தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு...!!

திருட்டு குற்றம்சாட்டப்பட்ட நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்‌ தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு...!!

பசுமை கட்சியை சேர்ந்த நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்‌ Golriz Ghahraman, ஆக்லாந்தில் உள்ள ஒரு Boutique கடையில் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து வெலிங்டனில் உள்ள Cre8iveworx வெலிங்டன் துணிக்கடையிலும் அவர்‌ திருடியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கடந்த வாரம் அவர் அவரது இலாகாக்களில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த Ghahraman நியூசிலாந்திற்கு திரும்பியுள்ளார்.

இதனிடையே Ghahraman தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

நான் எனது செயல்களை மன்னிக்க முயற்சிக்கவில்லை, ஆனால் அவற்றை விளக்க விரும்புகிறேன்.

நான் நிறைய பேரை ஏமாற்றிவிட்டேன், நான் மிகவும் வருந்துகிறேன். மருத்துவ மதிப்பீட்டிற்குப் பிறகு, எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதை புரிந்துகொள்கிறேன்.

எனது மன ஆரோக்கியத்திற்கு சிறந்த விஷயம் என்னவென்றால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, நான் குணமடைவதில் கவனம் செலுத்துவதும், உலகில் நேர்மறையான மாற்றத்திற்காக வேலை செய்வதற்கான பிற வழிகளைக் கண்டுபிடிப்பதும் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பசுமைக் கட்சியின் இணைத் தலைவர்களான மராமா டேவிட்சன் மற்றும் ஜேம்ஸ் ஷா ஆகியோர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மனித உரிமைகள், உண்மையான சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மற்றும் தேர்தல் சீர்திருத்தம் ஆகியவற்றிற்காக ஆறு ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் முன்னணிக் குரலாக கஹ்ராமன் இருந்து வருகிறார். அவர் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் ராஜினாமா செய்யும் முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம்.

இந்தச் சூழ்நிலையில் கஹ்ராமன் வெளியேறுவதைக் கண்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம், மேலும் அவர் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள்.

எதிர்காலத்தில் அவர் சமூகங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பார் என்பது எங்களுக்குத் தெரியும். போலீஸ் விசாரணைகள் தொடரும் போது, ​​குற்றச்சாட்டுகளின் விவரங்கள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்