Breaking News

நியூசிலாந்தின் பல பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸை எட்டிய வெப்பநிலை...!!

நியூசிலாந்தின் பல பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸை எட்டிய வெப்பநிலை...!!

நியூசிலாந்தின் பல பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல் உயர்ந்துள்ளது.

Canterbury இல் உள்ள Hanmer Springs இல் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை சேவையின் வானிலை ஆய்வாளர் டுபோரோ மார்ஸ்டர்ஸ் கூறினார்.

Dunedin, Blenheim மற்றும் Oxford ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.

மேலும் நாடு முழுவதும் பல இடங்களில் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் மாலை 4 மணி வரை George Sound இற்கு வடக்கே Fiordland மற்றும் Haast இற்கு தெற்கே Westland இல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 15 முதல் 25 மிமீ வரையிலான உச்ச வீதத்துடன் 110 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று MetService தெரிவித்துள்ளது.

செய்தி நிருபர் - புகழ்