Breaking News

Westland மற்றும் Buller இல் கனமழைக்கு வாய்ப்பு - MetService எச்சரிக்கை...!!

Westland மற்றும் Buller இல் கனமழைக்கு வாய்ப்பு - MetService எச்சரிக்கை...!!

எதிர்வரும் நாட்களில் West Coast பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் எனவும்  South Island இன் சில பகுதிகளுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு முதல் வியாழன் காலை வரை West Coast பகுதிகளில் 500 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக MetService தெரிவித்துள்ளது.

வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஆறுகள் மற்றும் நீரோடைகளின் நீர் மட்டம் விரைவாக உயரும் என்றும் அது தெரிவித்துள்ளது.

Fiordland, Westland மற்றும் Buller ஆகிய இடங்களில் இன்று இரவு முதல் ஆரஞ்சு மழை எச்சரிக்கைகள் உள்ளன.

மேலும் Fiordland மற்றும் Canterbury ஹை கன்ட்ரியில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Westland இல் இன்று இரவு முதல் வியாழன் காலை 9 மணி வரை கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் கடலோரப் பகுதியில் 150மிமீ வரை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.