Breaking News

Tasman இல் அபாயகரமான இரசாயனங்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வீதியை விட்டு விலகி விபத்து...!!

Tasman இல் அபாயகரமான இரசாயனங்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வீதியை விட்டு விலகி விபத்து...!!

Tasman இல் உள்ள மாநில நெடுஞ்சாலை 6 இல் அபாயகரமான இரசாயனங்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வீதியை விட்டு விலகிச் சென்று தடுப்புச் சுவரில் மோதியதையடுத்து Hira வில் உள்ள மாநில நெடுஞ்சாலை மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Central வீதி மற்றும் Hori Bay வீதி இடையே இன்று அதிகாலை 4.40 மணியளவில் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டன.

இந்த விபத்தில் யாருக்கும் காயங்களும், ட்ரக்கிற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காலை 9 மணி நிலவரப்படி, சாலை மீண்டும் திறக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்