Breaking News

Burnham ராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த பெண் தொடர்பில் வெளியான தகவல்...!!

Burnham ராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த பெண் தொடர்பில் வெளியான தகவல்...!!

South Island இல் உள்ள Burnham ராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த பெண்ணின் பெயரை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அவ 16 வயதான எலிசபெத் மார்வின் எனவும், அவர் Selwyn ஐ சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிறிஸ்ட்சர்ச்சின் தெற்கே உள்ள குறித்த ராணுவ முகாமில் கடந்த புதன்கிழமை அதிகாலை 2 மணிக்குப் பின்னர் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தீ சந்தேகத்திற்குறியதாக கருதப்படவில்லை என்று டிடெக்டிவ் சார்ஜென்ட் பிரென்ட் மென்சீஸ் கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்