Breaking News

உறையவைக்கும் கடும் குளிர் - நியூசிலாந்து முழுவதும் நாளை மின்வெட்டு...!!

உறையவைக்கும் கடும் குளிர் - நியூசிலாந்து முழுவதும் நாளை மின்வெட்டு...!!

நியூசிலாந்தில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே குறையும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் நாளை காலை நாட்டில் பரவலாக  மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் பவர் கிரிட் ஆபரேட்டர்  Transpower இன்று காலை ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது, அதில், "வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான மின் உற்பத்தி இல்லை" என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் தாங்கள் பயன்படுத்தாத அறைகளில் ஹீட்டர் அல்லது விளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம், மற்றும் சலவை இயந்திரங்கள், துணி உலர்த்திகள் மற்றும் பாத்திரங்களைக் கழுவுதல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தாமதப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்