Breaking News

Marlborough வில் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்து - ஒருவர் படுகாயம்..!!

Marlborough வில் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்து - ஒருவர் படுகாயம்..!!

Marlborough வில் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு முன்னதாக Havelock என்ற இடத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை 6ல் இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த நபர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு ண்டு செல்லப்பட்டார்.

வானிலை நிலவரங்கள் பனிமூட்டமாக இருந்ததால், கூடுதல் கவனம் செலுத்துமாறும் அல்லது அப்பகுதியில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் சாரதிகளை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.