Breaking News

SJB-UNP இணைகிறதா?

SJB-UNP இணைகிறதா?

எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் இன்று(21) இடம்பெறும் கலந்துரையாடலையடுத்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என, கட்சியின் பதில் பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொள்ளுமாறு அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.

குறித்த கோரிக்கை  தொடர்பிலும் இன்றைய கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படும் என, பதில் பொதுச்செயலாளர் பிரசன்ன ஷாமல் செனரத் குறிப்பிட்டுள்ளார்.