Breaking News

South Dunedin, Woolworths சூப்பர் மார்க்கெட்டில் மேலும் இரண்டு எலிகள் கண்டுபிடிப்பு...!

South Dunedin, Woolworths சூப்பர் மார்க்கெட்டில் மேலும் இரண்டு எலிகள் கண்டுபிடிப்பு...!

South Dunedin இல் உள்ள Woolworths சூப்பர் மார்க்கெட்டில் (Countdown supermarket) மேலும் இரண்டு எலிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் எலிகளை ஒழிப்பதற்காக குறித்த சுவர் மார்க்கெட் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் மூடப்பட்டு பின்னர் பெப்ரவரி 28 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.

நியூசிலாந்து உணவுப் பாதுகாப்பு துணை இயக்குநர் ஜெனரல் வின்சென்ட் அர்பக்கிள் கூறுகையில், கடை மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து இரண்டு எலிகள் பிடிக்கப்பட்டன, ஆனால் Woolworths மேலாண்மையில் தொடர்ந்து கவனம் செலுத்தியது திருப்தி அளிக்கிறது..

நியூசிலாந்து உணவுப் பாதுகாப்பு நிறுவனம் கொறித்துண்ணிகள் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து வருகிறது. மேலும் இந்த எலிகள் பிரச்சினை முதலில் அக்டோபர் 2023 இல் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் டஜன் கணக்கான எலிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவை கட்டிடத்திற்குள் ஊர்ந்து செல்வதாக முதலில் நம்பப்பட்டது. ஆனால் பிப்ரவரியில், சூப்பர் மார்க்கெட்டின் சுவர்களில் எலிகள் கூடு கட்டியதற்கான ஆதாரம் கிடைத்ததாக Woolworths கூறியது.

செய்தி நிருபர் -  புகழ்