Breaking News

Northland இல் பெண் ஒருவரை கொலை செய்ததாக 46 வயதுடைய பெண் ஒருவர் கைது..!!

Northland இல் பெண் ஒருவரை கொலை செய்ததாக 46 வயதுடைய பெண் ஒருவர் கைது..!!

Northland இல் பெண் ஒருவரை கொலை செய்ததாக 46 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு Pukenui இல், Houhora Heads சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர், அங்கு ஒரு பெண் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் காணப்பட்டார்.

இதனையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டபோதிலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் அல் சைமன்ஸ் தெரிவித்தார்.

இதனையடுத்து 46 வயதான பெண் ஒருவர் அந்த வீட்டில் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றம் சாட்டப்பட்டார்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்புகொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது.

செய்தி நிருபர் - புகழ்