Breaking News

"ஆக்லாந்து பசிஃபிகா" திருவிழா - களைகட்டிய கொண்டாட்டங்கள்...!! (Photos)

"ஆக்லாந்து பசிஃபிகா" திருவிழா - களைகட்டிய கொண்டாட்டங்கள்...!! (Photos)

இந்த ஆண்டு நடைபெறும் ஆக்லாந்தில் நடைபெறும் "ஆக்லாந்து பசிஃபிகா" திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளனர்.

11 பசிபிக் தீவு தேசங்கள், கலாச்சார மற்றும் சமகால நிகழ்ச்சிகள், கலை மற்றும் கைவினைக் காட்சிகள் மற்றும் சுவையான உள்ளூர் உணவுகள் என நியூசிலாந்தில் உள்ள பசிஃபிகா மக்களை பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மிகப்பெரிய மையமாக ஆக்லாந்து உள்ளது.

பசிபிக் முழுவதும் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளுடன் தங்கள் கலாச்சாரங்களைக் கொண்டாட இது ஒரு நம்பமுடியாத நல்ல வாய்ப்பு என்று கலைஞர்கள் கூறினர்.

பிரதம மந்திரி கிறிஸ்டோபர் லக்சன், எதிர்க்கட்சி தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் உட்பட பல எம்.பி.க்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

   

செய்தி நிருபர் - புகழ்