Breaking News

வெலிங்டனில் 79 வயது பெண்ணை கொலை செய்த ஆசிரியை கைது...!!

வெலிங்டனில் 79 வயது பெண்ணை கொலை செய்த ஆசிரியை கைது...!!

கடந்த மாதம் வெலிங்டனில் ஹெலன் கிரிகோரி என்ற பெண்‌ கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

79 வயதான கிரிகோரி ஜனவரி 24 அன்று Khandallah என்ற இடத்தில் உள்ள ‌Baroda தெருவில் தனது வீட்டில் இறந்து கிடந்தார்.

இந்நிலையில் அவரது மரணம் தொடர்பில் 52 வயதான Paraparaumu வை தளமாகக் கொண்ட ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் பெயரை வெளியிடாமல் இருப்பதற்கான தற்காலிக அனுமதி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் வரை அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

செய்தி நிருபர் - புகழ்