Breaking News

Northland இன் Whangārei Heads‌ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து - ஒருவர் பலி...!!

Northland இன் Whangārei Heads‌ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து - ஒருவர் பலி...!!

Northland இன் Whangārei Heads‌ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Parua Bay இன் Wharf வீதிக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் இன்று காலை 9.55 மணியளவில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

தீவிர விபத்து பிரிவு சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கிடையில், Whangārei Heads வீதி, மேற்கு நோக்கி செல்லும் Owhiwa சாலைக்கும் கிழக்கே செல்லும் Crisp சாலைக்கும் இடையில் மூடப்பட்டுள்ளது.

குறித்த வீதி சிறிது நேரம் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் வாகன சாரதிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.