Breaking News

Nelson இல் கத்தியால் குத்தப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி...!!

Nelson இல் கத்தியால் குத்தப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி...!!

Nelson இல் கத்தியால் குத்தப்பட்ட இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Hato Hone St John செய்தித் தொடர்பாளர் கூறுகையில்..

நேற்று இரவு 9 மணிக்குப் பின்னர் Haven சாலை மற்றும் Halifax தெரு சந்திப்பில் இச் சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு இரண்டு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டன.

இந்நிலையில் படுகாயமடைந்த இரண்டு பேர் நெல்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட 20 மற்றும் 51 வயதுடைய குறித்த இரண்டு ஆண்களும் நிலையான நிலையில் இருப்பதாகவும், மருத்துவமனையில் குணமடைந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணை நடந்து வருகிறது, இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.