Breaking News

Hawke's Bay இல் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்த நபர் - பொலிஸார் கொலை விசாரணை...!!!

Hawke's Bay இல் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்த நபர் - பொலிஸார் கொலை விசாரணை...!!!

நேற்றிரவு Hawke's Bay இல் Hastings ஐ சேர்ந்த ஒரு நபர் உயிரிழந்ததை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 11.45 மணியளவில் Flaxmere, Ramsey Crescent, என்ற முகவரியில் வீட்டிற்கு வெளியே இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு‌ அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

இரண்டாவது நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105  என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.