Breaking News

Lincoln இல் இரசாயன வெடி விபத்து...!!!

Lincoln இல் இரசாயன வெடி விபத்து...!!!

கிறிஸ்ட்சர்ச்சின் தெற்கில் உள்ள Lincoln இல் இரசாயன வெடி விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த வெடி விபத்து குறித்து தீயணைப்பு வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பிற்பகல் 2.30 மணிக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் Robert தெருவில் ஒரு நபர் இரண்டு ரசாயனங்களை ஒன்றாக கலக்கியதால் வெடி விபத்து ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் அவசரகால செய்தித் தொடர்பாளர், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

அந்த இடத்தை ஆய்வு செய்யும் போது அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.

Robert தெருவைச் சுற்றியுள்ள ஒரு சிறிய பகுதி குறுகிய காலத்திற்கு அணுக முடியாது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.