Breaking News

டன்னீடன் பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரை துணிவுடன் எதிர்கொண்ட அதிகாரிகளுக்கு வீர விருது..!!

டன்னீடன் பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரை துணிவுடன் எதிர்கொண்ட அதிகாரிகளுக்கு வீர விருது..!!

கடந்த ஆண்டு டன்னீடனின் Countdown பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை தடுத்து நிறுத்த துணிவுடன் செயல்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு இன்று 2022ஆம் ஆண்டுக்கான காவல்துறை சங்கத்தின் வீர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட அன்று கான்ஸ்டபிள் சோஃபி அலிசன் மற்றும் டிடெக்டிவ் கான்ஸ்டபிள் ஜெர்மி டோஷி ஆகியோர் Countdown இல் உள்ள மளிகைக் கடைக்குச் சென்று கொண்டிருந்தனர்.

அலிசன் அன்றைய தினம் பணியில் இல்லை மற்றும் டோஷி சாதாரண உடையில் மற்றும் மதிய உணவு இடைவேளையில் இருந்தார்.

இந்நிலையில் அங்கு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவரும் துணிவுடன் செயல்பட்டு குற்றவாளியை கைது செய்ய உதவினர்.

இதனையடுத்து இன்று வெலிங்டனில் நடந்த காவல்துறை சங்கத்தின் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இந்த விருதை அவர்களுக்கு வழங்கினார்.

இவ்விருதை பெறுவதில் பெருமை அடைவதாக இரு அதிகாரிகளும் கூறினர்.

மேலும் இச் சம்பவத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருந்த கவுண்டவுன் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் துணிச்சலையும் அங்கீகரிக்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.