Breaking News

மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு சொந்தமான ஆக்லாந்து மாளிகை விற்பனைக்கு...!!

மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு சொந்தமான ஆக்லாந்து மாளிகை விற்பனைக்கு...!!

மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு சொந்தமான ஆக்லாந்தில் உள்ள மாளிகை 72 ஆண்டுகளில் முதல் முறையாக சொத்து சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆக்லாந்தின் வடமேற்கு விளிம்பில் அமைந்துள்ள இந்த பாரம்பரிய மாளிகையானது, கடந்த மாதம் உடல்நலக் குறைவால் 96 வயதில் காலாமான மூன்றாம் சார்லஸ் மன்னரின் தாயார் இரண்டாம் எலிசபெத் மகாராணியிடமிருந்து அவருக்கு வழங்கப்பட்டதாகும்.

கிளார்க் ஹவுஸ் என அழைக்கப்படும் இந்த சொத்து, 1950 மற்றும் 2016 க்கு இடையில் வான் நடவடிக்கைகளுக்காக நியூசிலாந்து பாதுகாப்புப் படை மற்றும் பிற அரசு நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டது.

இத்தாலிய பாணியில் கட்டப்பட்ட இந்த மாளிகை கடந்த ஆறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று ரியல் எஸ்டேட் இணையதளமான OneRoof தெரிவித்துள்ளது.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்த பாரம்பரிய சொத்தின் மதிப்பு 8000 பவுண்டுகள் மட்டுமே என வரலாற்று பதிவுகள் காட்டுகின்றன.

ஆனால் தற்போது இதன் பெறுமதி 16.6 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது

ஹார்கோர்ட்ஸின் இணையதளத்தில் உள்ள தற்போதைய பட்டியல், இந்த சொத்து "முக்கியமான கடந்தகால தொழில்துறை மற்றும் இராணுவ வரலாற்றில் தப்பிப்பிழைத்த சில முக்கிய இடங்களில் ஒன்றாகும்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் "நியூசிலாந்து வரலாற்றின் மிகச்சிறந்த தொழில்நுட்ப மற்றும் தொல்பொருள் உதாரணத்தைப் பெறுவதற்கு இது வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு" என்று அதில் கூறப்பட்டுள்ளது.