Breaking News

கொரோனா சடலங்களை கட்டாய தகனம் செய்வதை நிறுத்த வேண்டும்! அமெரிக்க செனட்டர் இலங்கை தூதுவருக்கு கடிதம்!

கொரோனா சடலங்களை கட்டாய தகனம் செய்வதை நிறுத்த வேண்டும்! அமெரிக்க செனட்டர் இலங்கை தூதுவருக்கு கடிதம்!

கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்களை தகனம் மட்டுமே செய்ய வேண்டுமென தீர்மானிப்பது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் என்று ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர் என்று அமெரிக்க செனட்டர் கிறிஸ் வான் ஹோலன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அமெரிக்காவிற்கான தூதர் ரவிநாத் ஆரியசிங்கவுக்கு இது குறித்து அவர் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

கிறிஸ் வான் ஹோலன் அனுப்பிய கடிதத்தில்,

கொரோனா நோய்த்தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வது நிலத்தடி நீரை அதிகரிக்கும் என்று இலங்கை சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள் அடக்கம் மற்றும் தகனம் ஆகிய இரண்டிற்கும் அனுமதி அளித்துள்ளன.

உடல்களை அடக்கம் செய்வதால் வைரஸ் பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களை தகனம் மட்டுமே செய்ய வேண்டுமென வற்புறுத்துவது மனித உரிமை மீறல், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதன் விளைவாக, கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் மனித சடலங்களை கட்டாயமாக தகனம் செய்யும் முடிவை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை ஐ.நா சபை வலியுறுத்தியுள்ளது. அதை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.