Breaking News

சமூகத்தில் 60 பேருக்கு கொவிட் தொற்று உறுதி - சுகாதார அமைச்சகம்

சமூகத்தில் 60 பேருக்கு கொவிட் தொற்று உறுதி - சுகாதார அமைச்சகம்

இன்று நாட்டில் 60 கொவிட் -19 சமூக தொற்றுகள் உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு அறிக்கையில், இன்றைய 57 சமூக தொற்றாளர்கள் ஆக்லாந்திலும் மூன்று பேர் வைகாடோவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் ஐந்து பேர் உட்பட 30பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 4696 கொவிட் தொற்றாளர்கள் நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆக்லாந்தில் மொத்தம் 1943 சமூக வழக்குகள் உறுதிபடுத்தபட்ட நிலையில் அவற்றில் 1350 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆக்லாந்தர்களில் 89 சதவிகிதம் முதலாவது டோஸ் தடுப்பூசியும் (1,271,322 பேர்), 71 சதவிகிதம் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் (1,022,871 பேர்) பெற்றிருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றுவரை நாடு முழுவதும் 6,344,212 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 3,572,298 முதல் டோஸ் மற்றும் 2,271,914 இரண்டாவது டோஸ் ஆகும்.