Breaking News

ஹமில்டனில் வீட்டில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு - பெண் ஒருவர் கைது...!

ஹமில்டனில் வீட்டில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு - பெண் ஒருவர் கைது...!

இன்று அதிகாலை ஹமில்டனில் உள்ள ஒரு வீட்டில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து, 45 வயதுடைய பெண் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Rototuna, Cranmer Close என்ற இடத்தில் உள்ள ஒரு முகவரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அதிகாலை 2 மணிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டதாக துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ஸ்காட் நீல்சன் கூறினார்.

அங்கு ஆபத்தான நிலையில் இருந்த நபர் ஒருரை காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக நீல்சன் தெரிவித்தார்.

மேலும் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவை வழங்குகிறார்கள் என அவர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்