Breaking News

Onehunga வில் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்து...!!

Onehunga வில் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்து...!!

ஆக்லாந்தின் Onehunga என்ற இடத்தில் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

Onehunga Harbour சாலையில் இன்று காலை 7.35 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் அவசர சேவைகள் செயல்படுவதால் சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓட்டுநர்கள் போக்குவரத்து தாமதத்தை எதிர்பார்க்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்