Breaking News

Hastings இல் வாகனம் மற்றும் ஸ்கூட்டர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு...!!

Hastings இல் வாகனம் மற்றும் ஸ்கூட்டர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு...!!

Hastings இல் வாகனம் மற்றும் மொபிலிட்டி ஸ்கூட்டர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் நண்பகலுக்குப் பிறகு Tomoana சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்