Breaking News

Northland இல் மரத்தில் மோதி தீப்பிடித்த கார் - தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழப்பு...!!

Northland இல் மரத்தில் மோதி தீப்பிடித்த கார் - தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழப்பு...!!

Northland இல் கார் மரத்தில் மோதி தீப்பிடித்ததில் 64 வயது முதியவரும் அவரது 86 வயது தாயும் உயிரிழந்துள்ளனர்.

புதன்கிழமை (24) நள்ளிரவு 12.15 மணியளவில் குறித்த வாகனம் Whangārei இற்கு தெற்கில் உள்ள Otaika Valley சாலையில் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றதாக மூத்த காவலர் வாரன் பன் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முயற்சித்தும் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை.

தாயும் மகனும் உள்ளூர்வாசிகள் என்று நம்பப்படுகிறது ஆனால் அவர்கள் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை என்று பன் கூறினார்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

செய்தி நிருபர் - புகழ்