Breaking News

Cambridge இல் 12 வயதுக்குட்பட்ட சிறுமியை அநாகரீகமாக தாக்கிய நபர் கைது...!!

Cambridge இல் 12 வயதுக்குட்பட்ட சிறுமியை அநாகரீகமாக தாக்கிய நபர் கைது...!!

Cambridge இல் 12 வயதுக்குட்பட்ட சிறுமியை அநாகரீகமாக தாக்கி மிரட்டிய 33 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Cambridge பகுதியில் நபர் ஒருவர் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக அதிகாரிகளுக்கு பல புகார்கள் கிடைத்தன.

இதனையடுத்து பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

துப்பறியும் சார்ஜென்ட் ஹாரி ஹோட்சன், அந்த நபரை கைது செய்ய தகவல்களை வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் வெள்ளிக்கிழமை Hamilton மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்