Breaking News

போஸி பார்க்கரை நியூசிலாந்திற்குள் அனுமதிப்பதற்கான தீர்மானம் சரியானது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு...!!

போஸி பார்க்கரை நியூசிலாந்திற்குள் அனுமதிப்பதற்கான தீர்மானம் சரியானது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு...!!

திருநங்கைகளுக்கு எதிரான பிரித்தானிய பெண் செயற்பாட்டாளர் போஸி பார்க்கரை நியூசிலாந்திற்குள் அனுமதிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு சரியானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Kellie-Jay Keen-Minshull என்றும் அழைக்கப்படும் பார்க்கர், இந்த வார இறுதியில் ஆக்லாந்து மற்றும் வெலிங்டனில் பேரணிகளை நடத்த நியூசிலாந்திற்கு வருகை தர உள்ளார்.

சமீபத்தில் மெல்போர்னில் நடந்த அவரது நிகழ்வில் கீன்-மின்ஷூலின் ஆதரவாளர்கள் நாஜி வணக்கம் செலுத்தியமை, மற்றும் LGBT (lesbian, gay, bisexual, and transgender) ஆதரவாளர்களை துஷ்பிரயோகம் செய்ததை அடுத்து அவரை நியூசிலாந்துக்குள் அனுமதிப்பது தொடர்பில் குடிவரவு திணைக்களம் ஆய்வு செய்தது.

பின்னர் அவர் நாட்டிற்குள் நுழையலாம் என்று திணைக்களம் முடிவு செய்தது.

இதனையடுத்து மின்ஷூலை நாட்டிற்குள் நுழைவதை எதிர்த்து அவரை நியூசிலாந்துக்குள் அனுமதிப்பது தொடர்பில் நீதித்துறை மறுஆய்வுக்காக இடைக்கால உத்தரவு வழங்குமாறு ரெயின்போ சமூகக் குழுக்களின் கூட்டணி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதனையடுத்து இன்று காலை வெலிங்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

இதன்போது பாலின சிறுபான்மையினர் Aotearoa, InsideOUT Kōaro மற்றும் Auckland Pride ஆகியோர் நியூசிலாந்திற்கு வருவதற்கு பார்க்கருக்கு பச்சை விளக்கு கொடுத்து குடிவரவு அமைச்சர் தவறு செய்துவிட்டார் என்று வாதிட்டனர்.

இதனிடையே குடிவரவு திணைக்களத்தின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்த உயர்நீதிமன்றம் போஸி பார்க்கரை நியூசிலாந்திற்குள் அனுமதிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு சரியானது என தீர்ப்பளித்துள்ளது.

கீன்-மின்ஷுல் இந்த வார இறுதியில் ஆக்லாந்து மற்றும் வெலிங்டனில் பேரணிகளை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.