Breaking News

கடல் மற்றும் தரை வழி எல்லைகளை அவசரமாக மூடுகின்றது குவைட்

கடல் மற்றும் தரை வழி எல்லைகளை அவசரமாக மூடுகின்றது குவைட்

நாடு முழுவதும் முடக்கப்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் முன்வைத்த கோரிக்கையை, குவைட் அமைச்சரவை நிராகரித்துள்ளது.

அத்துடன், குவைட் நாட்டின் கடல் எல்லை மற்றும் நிலப்பரப்புக்களின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு நாளை (24) முதல் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், வெளிநாடுகளிலுள்ள தமது பிரஜைகள் மற்றும் அவர்களின் பணியாளர்களுக்கு மாத்திரம் நாட்டிற்குள் வருகைத் தர அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளிலிருந்து வருகைத் தரும் தமது நாட்டு பிரஜைகள், 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதல் ஒரு வாரம் ஹோட்டலிலும், அடுத்த ஒரு வாரம் தமது வீட்டிலும் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

விமானங்களின் மூலம் நாட்டுக்குள் வருவோர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு தொடர்ந்தும் உட்படுத்தப்படுவார்கள் என அந்த நாட்டு சுகாதார அமைச்சு மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு ஆகிய தெரிவித்துள்ளன.

உணவகங்கள், கஃபே, பல்நோக்கு வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொண்டு செல்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குவைட் நாட்டில் கொவிட் வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள பின்னணிலேயே, அந்த நாட்டு அரசாங்கம் இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.