Breaking News

Canterbury இன் Rolleston நகரில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு..???

Canterbury இன் Rolleston நகரில் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு..???

Canterbury நகரமான Rolleston நகரில் நேற்றைய தினம் காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

50 வயதான மேகன் என்ற குறித்த பெண், நேற்று காலை 9.30 மணியளவில் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் Taylors Mistake பகுதிக்கு பயணித்ததாக நம்பப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை Taylors Mistake பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சடலம் இன்னும் முறையாக அடையாளம் காணப்படாத நிலையில், அது காணாமல் போன பெண் என பொலிசார் நம்புகின்றனர்.

மேலும் குறித்த மரணம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

"எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் உள்ளன" என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்