Breaking News

டோங்காவை இணையத்துடன் மீண்டும் இணைக்க உதவுமாறு எலோன் மஸ்க்கிடம் ஷேன் ரெட்டி கோரிக்கை...!!!

டோங்காவை இணையத்துடன் மீண்டும் இணைக்க உதவுமாறு எலோன் மஸ்க்கிடம் ஷேன் ரெட்டி கோரிக்கை...!!!

Whangārei இன் தேசிய எம்.பி Shane Reti  ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாகியான‌ எலோன் மஸ்கிடம் எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட டோங்கன் மக்களை உலகின் பிற பகுதிகளுடன் மீண்டும் இணைக்க உதவும் வகையில் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து ட்விட்டரில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த செயலிழப்பு பாதிக்கப்பட்ட டோங்கா நாட்டுடனான தொடர்பை கடுமையாக பாதித்துள்ளது, சர்வதேச உதவிக்கான முயற்சிகள் மற்றும் டோங்காவில் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான வெளிநாட்டு குடும்ப உறுப்பினர்களின் முயற்சிகளை சிக்கலாக்கியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை சில சர்வதேச அழைப்புத் திறன் நாட்டிற்கு மீட்டெடுக்கப்பட்டாலும், கடலுக்கடியில் உள்ள கேபிளை சரிசெய்யும் வரை முழு சேவைகளும் கிடைக்காது என்று வழங்குநர் தெரிவித்துள்ளனர்.

கேபிளில் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்கு ஒரு மாதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த பதிவிற்கு மஸ்க் ட்விட்டரில் பதிலளித்தார்,

அவர்களுக்கு உதவி தேவை என்பதை டோங்காவில் உள்ளவர்களிடமிருந்து உறுதிப்படுத்துமாறு கோரினார்.

இந்நிலையில் ராஜதந்திரிகள் மற்றும் டோங்கன் சமூகத்தினரிடம் தான் பேசி வருவதாகவும், அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் "லேசர் இணைப்புகளுடன் கூடிய போதுமான செயற்கைக்கோள்கள் எங்களிடம் இல்லை, மேலும் டோங்கா பிராந்தியத்திற்கு சேவை செய்யும் ஜியோ சாட்கள் ஏற்கனவே இருப்பதால், இப்போது இதைச் செய்வது எங்களுக்கு கடினமான விஷயம்" என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதனிடையே Asian Development Bank இன்று டோங்கா அரசாங்கத்திற்கு 10 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை மீட்பு முயற்சிகளுக்காகவும், அத்தியாவசிய சேவைகளை மீட்டெடுப்பதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.