Breaking News

ஜீவனின் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை வெளியானது

ஜீவனின் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை வெளியானது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமானுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அதன்படி ,கடந்த சில நாட்களாக சுயதனிமையில் இருந்த இராஜாங்க அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் கொழும்பில் தங்கியிருந்த நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.

மேலும் ,இது தொடர்பான பரிசோதனை அறிக்கை நேற்று (29) மாலை வெளியாகியுள்ளது அதனடிப்படையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என அவரது ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.