Breaking News

14-வது ஐ.பி.எல். திருவிழா இன்று ஆரம்பம்

14-வது ஐ.பி.எல். திருவிழா இன்று ஆரம்பம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் மைதானத்தில் ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடத்தப்படுகிறது.

சென்னையில் இன்று இரவு 7 முப்பது மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

பட்டம் வென்ற 5 மாதங்களிலே அடுத்த தொடரில் களமிறங்கி உள்ள மும்பை அணிக்கு முக்கிய வீரர் குயிண்டன் டி காக் தனிமைப்படுத்துதலில் இருப்பது கூடுதல் பின்னடைவை தந்து உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும்.