Breaking News

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது சவாலானது - அவுஸ்திரேலிய அணி கேப்டன்...!!

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது சவாலானது - அவுஸ்திரேலிய அணி கேப்டன்...!!

2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் 19ஆம் திகதி பலப்பரீட்சை நடத்துகின்றன.

தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. அவுஸ்திரேலிய அணியோ சவால்களை சந்தித்து வந்துள்ளதால், ரசிகர்களுக்கு இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. 

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய பின்னர் பேசிய அவுஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது சவாலாக இருக்கும் என கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்...

எங்களில் சிலர் இதற்கு முன்னதாகவே உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளோம். அதேபோன்று இன்னும் சிலர் டி20 உலகக்கோப்பையில் விளையாடியுள்ளோம். அதனால் இறுதிப்போட்டியை நினைத்து கவலை இல்லை. இருந்தாலும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது சவாலானது.

இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் நிறைந்திருப்பார்கள். இந்திய அணிக்கு மட்டுமே ஆதரவு இருக்கும். மேலும், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நான் விளையாடியது மிகவும் சிறப்பான ஒன்று.

இதன் பின்னர் நான் இந்தியாவில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது. ஆனால் தற்போது இந்த போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.