Breaking News

அமெரிக்காவில் கப்பல் மோதி உடைந்த பாலம் - பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்...!!

அமெரிக்காவில் கப்பல் மோதி உடைந்த பாலம் - பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்...!!

அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் சரக்கு கப்பல் மோதி பாலம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் மேரிலண்ட் பாலமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

பால்டிமோர், மேரிலாந்தில் உள்ள ஒரு பெரிய பாலம் செவ்வாய் காலை (26) பகுதியளவில் இடிந்து விழுந்துள்ளது பால்டிமோர் துறைமுகத்தை கடக்கும் பாலத்தில் சரக்கு கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகின்றது.

இதன் போது  பாலத்தில் பயணித்தவர்கள்  ஆற்றில் விழுதுள்ளதாகவும் கூறப்படுவதுடன் மீட்பு பணிகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படும்  அதேவேளை பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும்   அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜில் கிழக்கு நேரப்படி அதிகாலை 1:27 மணிக்கு கடலோர காவல்படைக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் தகவலறிந்து விரைந்து சென்ற பால்டிமோர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈருபட்டுள்ளதாக கூறப்படும் அதேவேளை, பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கபப்ட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.   

கப்பல் கண்காணிப்பு தரவுகளின்படி, அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தில் உள்ள விசைப் பாலம், சிங்கப்பூர் கொடியிடப்பட்ட டாலி கொள்கலன் கப்பலால் தாக்கப்பட்டது. 300 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.