Breaking News

அதுக்கெல்லாம் லோகேஷ் செட்டாக மாட்டார் - ஆர்ஜே பாலாஜியின் வெளிப்படையான பேச்சு..!

அதுக்கெல்லாம் லோகேஷ் செட்டாக மாட்டார் - ஆர்ஜே பாலாஜியின் வெளிப்படையான பேச்சு..!

கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் படத்தின் டிரெய்லர் இன்று டிரெய்லர் வெளியீட்டு விழாவுடன் வெளியானது. ஐசரி கணேஷ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் சமீப காலமாக சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டனர். கௌதம் மேனன் இயக்கிய படங்களை விட அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது. அவரை தொடர்ந்து மிஷ்கின் உள்ளிட்ட மற்ற இயக்குநர்களும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துள்ளனர். லியோ படத்தில் பல இயக்குநர்களை நடிக்க வைத்து அழகு பார்த்த லோகேஷ் கனகராஜ் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்துள்ள நிலையில், இதே போல இனியும் நடிப்பாரா என்கிற கேள்விக்கு பேட்டி ஒன்றில் பதில் அளித்த ஆர்ஜே பாலாஜி அந்த வரிசையில் லோகேஷ் வரமாட்டார் எனக் கூறியுள்ளார்.

லோகேஷும் நானும் நல்ல நண்பர்கள் நட்புக்காக மட்டுமே இந்த படத்தில் நடித்தார். அவருக்கு நடிக்கிற ஆர்வத்தை விட இயக்குவதில் தான் ஆர்வம் அதிகம். சில விழாக்களில் சந்தித்து பேசும் போது, தான் நடித்த காட்சிகளை தூக்கிட்டீங்களா என கேட்டார். ஆனால், அதெல்லாம் அப்படியே இருக்கு என்றதும் சிரித்து விட்டு சென்று விட்டார்.

லோகேஷ் கனகராஜை போலவே ஜீவாவும் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.