Breaking News

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை தயாரித்த NZ Post...!!

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை தயாரித்த NZ Post...!!

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட 6 நாணயங்களை NZ Post தயாரித்துள்ளது.

இந்த ஆறு நாணயங்கள் வெள்ளி மற்றும் தங்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

இவை மே 3 அன்று வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நாணயங்கள் வெலிங்டனின் ஸ்டீபன் புல்லர் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் NZ Post முடிசூட்டு விழாவை நினைவுகூரும் வகையில் தபால் தலைகளை வெளியிடும், இதில் மே 6 ஆம் திகதி நடைபெறும் முடிசூட்டு விழாவின் படங்கள் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.