Breaking News

இறுதி நேரத்தில் ஹக்கீம் மற்றும் ரிஷாடின் பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்பு இரத்து!

இறுதி நேரத்தில் ஹக்கீம் மற்றும் ரிஷாடின் பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்பு இரத்து!

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் மாத்திரமே சந்திப்புகளை நடத்தவுள்ளார். ஹக்கீம் எம்.பி, ரிஷாத் எம்.பி. ஆகியோருடனான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரை அண்மையில் சந்தித்து, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் கலந்துரையாடியிருந்தார்.

பாகிஸ்தான் பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம் கோரியிருந்தனர். இதன்படி குறுகிய நேரத்தை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

சந்திப்பு இரத்துக்கான காரணம் வெளியாகாத போதிலும், அரச உயர்மட்டத்திலிருந்து விடுக்கப்பட்ட அழுத்தத்தால் அவ்வாறு முடிவு எட்டப்பட்டிருக்கும் என நம்பப்படுகின்றது.