Breaking News

உக்ரேன் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்ற சாரதிகள் தனிமைப்படுத்தல்!

உக்ரேன் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்ற சாரதிகள் தனிமைப்படுத்தல்!

உக்ரேனிலிருந்து கடந்த மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வருகை தந்த 11 சிறார்கள் உட்பட சுற்றுலாப் பயணிகள் 102 பேர் முகக்கவசம் அணியாது சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் யால தேசிய வனத்திற்கு சுற்றுலா சென்ற அவர்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக இவர்களை அழைத்துச் சென்ற சவாரி வாகன 28 சாரதிகள் நேற்றிரவு இராணுவத்தினரால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இதனையடுத்து காரணமாக சாரதிகள் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளனர்.

3 மணித்தியாலங்கள் இவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றமைக்காக எங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவுள்ளனர். அதேபோல் சுற்றுலா முடிந்ததன் பின்னரே அனைத்து அறிவுறுத்தலும் வழங்கியுள்ளனர். 700 ரூபாய் சம்பளம் பெறுபவர்கள் இதிலுள்ளனர்.

14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினால் நாம் எவ்வாறு வாழ்வாதாரத்தை மேற்கொள்வது?

சுற்றுலாப் பயணிகளை நாடு முழுவதும் உலாவ அனுமதித்துவிட்டு எம்மை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவது தவறான விடயம் என்று இதன்போது சாரதியொருவர் தெரிவித்தார்.